மிஸ்டர்.லோக்கல்: சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

Updated: Feb 10, 2019, 09:29 AM IST
மிஸ்டர்.லோக்கல்: சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

சீமராஜா படத்துக்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்.