இணையத்தில் வைரலாகும் சன்னி லியோனின் மெச்சிக்கோ புகைப்படம்

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படும் சன்னி லியோனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 10, 2018, 08:26 PM IST
இணையத்தில் வைரலாகும் சன்னி லியோனின் மெச்சிக்கோ புகைப்படம்
Zee Media

அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார்.

குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் ஒளிப்பரப்பி வருகின்றது. இத்தொடரில் இவர் பிஸியாக இருந்த போதிலும், தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட இவர் தயங்குவதில்லை.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் மெச்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தந்து சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.