தளபதி விஜய் போல் நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்: வீடியோ வைரல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 3, 2021, 09:05 AM IST
தளபதி விஜய் போல் நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்: வீடியோ வைரல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இல் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் (Vaathi Coming), வாத்தி ரெய்டு என மாஸ்டர் (Master) படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இப்பாடல் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆனாலும், ரசிகர்களிடம் இப்பாடலுக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. 

ALSO READ | Beast: விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தது பீஸ்ட்

இந்த பாடலுக்கு விளையாட்டு வீரர்கள், பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்கள் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் (David Warner), வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

டிவியில் விஜய்யின் (Actor Vijay) வாத்தி கம்மிங் பாடல் ஓட, அதைப் பார்த்துக் கொண்டே, விஜய்யின் ஸ்டெப்களை ஆடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் வார்னரின் மகளும் இடம்பெற்றிருக்கிறார். சின்னக் குழந்தைகளை தனது நடிப்பால், ஆடலால், பாடலால் கவர்ந்திருக்கும் விஜய், டேவிட் வார்னர் மகளையும் கவர்ந்திருப்பதாக தெரிகிறது.  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. 

ALSO READ | Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News