துப்பாக்கி முனை திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ் கிடைத்துள்ளது!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ் கிடைத்துள்ளது!

Last Updated : Oct 24, 2018, 07:57 PM IST
துப்பாக்கி முனை திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ் கிடைத்துள்ளது! title=

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ் கிடைத்துள்ளது!

60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் துப்பாக்கி முனை. திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ் கிடைத்துள்ளதாக படத்தின் நாயகன் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிதக்கும் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். எல்.வி முத்துகணேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல.ராமமூர்த்தி எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக இத்திரைப்படம் டீஸர் செப்டம்பர் மாதம் வெளியானது. டீஸரில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் விக்ரம் பிரபு வலம் வருகிறார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பதினை படத்தின் டீஸர் வெளிக்காட்டியது.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு தனிக்கை குழ 'U' சான்றிதழ் வழங்கியுள்ளது என படக்குழுவினர் தெரவித்துள்ளனர்!

Trending News