திருப்பதி போறீங்களா - சாமியை பாக்க 30 மணி நேரம் ஆகுதாம் !

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசனம் செய்ய வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 12, 2022, 12:12 PM IST
  • திருப்பதி - அலைமோதும் மக்கள் கூட்டம்
  • லட்டுகளுக்கு தட்டுப்பாடு - விஐபி டிக்கெட் ரத்து
  • 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருப்பதி போறீங்களா - சாமியை பாக்க 30 மணி நேரம் ஆகுதாம் ! title=

கடந்த சில நாட்களாக கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. தற்போது கோடை விடுமுறை முடியும் தறுவாயில் அது இன்னும் உச்சம் தொட்டுள்ளது.

 tirupati,special darshan,elumalaiyan,govindha,Laddu,திருப்பதி,ஏழுமலையானை தரிசிக்க,ஏழுமலையான்,30 மணி நேரம்,விஐபி டிக்கெட்,திருப்பதி விஐபி டிக்கெட்,தேவஸ்தானம் ,உண்டியல் காணிக்கை  ,உண்டியல் வருமானம்

குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

tirupati,special darshan,elumalaiyan,govindha,Laddu,திருப்பதி,ஏழுமலையானை தரிசிக்க,ஏழுமலையான்,30 மணி நேரம்,விஐபி டிக்கெட்,திருப்பதி விஐபி டிக்கெட்,தேவஸ்தானம் ,உண்டியல் காணிக்கை  ,உண்டியல் வருமானம்

விஐபி டிக்கெட் ரத்து

முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் விஐபி டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வார நாட்களில் நடைபெறும் விசேஷ பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tirupati laddu

லட்டுகளுக்கு தட்டுப்பாடு 

ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக இரண்டு லட்டுக்கள் மட்டுமே ஒவ்வொரு பக்தருக்கும் தற்போது வழங்கப்படுகிறது. எனவே கூடுதல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என்று வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | பக்தர்களுக்கு விரைவில் மானிய விலையில் திருப்பதி "லட்டு" கிடைக்கும்

Tirupati laddu,undiyal,tirupati,special darshan,elumalaiyan,govindha,Laddu

உண்டியல் காணிக்கை  

இதற்கிடையே அலைமோதும் பொதுமக்களின் கூட்டத்தால் உண்டியல் வருமானமும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | திருப்பதி கோவில் சர்ச்சை! மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News