புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருப்பது தமிழர்களிடையே பிரபலமான ஒன்று. அதேபோல, புரட்டாசி என்றாலே அதனுடன் சேர்ந்து சனிக்கிழமை விரதம் என்ற வார்த்தையும் சேர்ந்துக் கொண்டுவிடும். புரட்டாசி சனி என்பது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது என்றால், அது திருப்பதி பெருமாளுடன் இணைந்த ஒன்றாகிவிட்டது. ஆனால், புரட்டாசியில் மட்டுமல்ல, எல்லா சனிக்கிழமைகளிலும் சனீஸ்வரர் வழிபாடு என்பது, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே பிரபலமானது.
இன்று குரோதி ஆண்டின் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. அதுமட்டுமல்ல, நவராத்திரியின் நிறைவு நாள். இன்று திருப்பதியில் பிரம்மோத்சவம் முடிவுக்கு வரும் நாள். இப்படி பல முக்கியமான சிறப்புகள் கொண்ட இன்று பெருமாளை வழிபடுவதுடன், சனீஸ்வரரையும் வழிபடுவது அவசியம்.
சனீஸ்வரர் வழிபாடு
நவக்கிரங்களில் முக்கியானவரான சனி பகவானுக்கு உரிய நாள் சனிக்கிழமை. சனி தோறும் அந்த நாளுக்கு உரிய சனீஸ்வரரை வணங்கினால், அதன் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் கோவில்களில் கூடும் கூட்டமும், எண்ணெய் விளக்கு போட்டு, எள் தீபம் ஏற்றி வணங்குவதற்கு வரிசைகட்டி நிற்கும் மக்களே சாட்சி.
சிவ வழிபாடு
சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும் சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது? என்பதைத் தெரிந்துக் கொண்டால், சனியின் முக்கியத்துவம் புரியும்.
மேலும் படிக்க | 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வாரம் ஓஹோன்னு இருக்கும்! உங்க ராசி என்ன? ராசிபலன்
சனி எப்படி சனீஸ்வரன் ஆனார்?
சூரியனுக்கு உஷாதேவி, சாயாதேவி என்று இரண்டு மனைவிகள் உண்டு. சூரியனின் மனைவியான சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் சனீஸ்வர பகவான். பிரகாசமான ஒளியாக மின்னும் சூரியனின் மகனான கிருதவர்மாவோ கருமை நிறத்தில் பார்க்கவே பயமூட்டுபவர். தந்தை சூரியனுக்கும், மகன் கிருதவர்மாவுக்கும் பகை உணர்வு நீடித்தது.
சூரியன் ஞாயிற்றுக்கிழமைக்கு உரியவர் என்றால், அவரது மகன் சனிக்கு, சனிக்கிழமை உரியது. சூரியனின் மகன் சிவன் மீது பக்தி கொண்டவர். சிவனுக்கு நிகரான நிலையை அடைய வேண்டும் என விரும்பிய சனி, காசிக்கு சென்று லிங்க பூஜை செய்து கடும் தவம் செய்தார். பக்தனின் பக்தியை கண்டு மனம் இரங்கிய சிவபெருமானிடம் சனி கேட்ட வரம் என்ன தெரியுமா?
மேலும் படிக்க | நவராத்திரியில் சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை போன்ற வழிபாடுகள் இந்த நவீன யுகத்தில் அவசியமா?
தந்தையை விட வலுவான மகன் சனி
வரமளிக்க முன் வந்த சிவபெருமானிடம் வரம் கேட்ட சனி, “என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில் இருந்து யாருமே தப்பக் கூடாது. என் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் அதிக பலம் கொண்டவனாக நான் இருக்கவேண்டும்..." என்று சரணடைந்தார்.
பக்தனுக்கு அருளும் தயாபரரான சிவபெருமான், சனி கேட்ட வரத்தைக் கொடுத்ததுடன், தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் வண்ணம், ஈஸ்வர பட்டத்தையும் தந்தார். அன்று முதல், சனி என்ற கிரகம், ஈஸ்வர பட்டத்துடன் சேர்த்து, சனீஸ்வரன் என்று அழைக்கப்பட்டார். இப்படி, ஈஸ்வரனிடம் வரம் வாங்கி தன் தந்தையை விட அதிக பலசாலியான சனீஸ்வரரின் பார்வைக்கு இருக்கும் சக்தி மிகப் பெரியது.
எனவே, புரட்டாசி சனியில் பெருமாளை வணங்குவதுடன், சனீஸ்வரரையும் வணங்கி, துன்பங்களைக் குறைத்து, இன்பங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ