இந்த 5 ராசிகளுக்கு 'புதன்' பண மழையை பொழிவார்.. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

Mercury Transit 2023 Effects: புத்திசாலித்தனம், வியாபாரம், உரையாடல், தர்க்கம் ஆகியவற்றைக் கொடுக்கும் புதன் தனது ராசியை மாற்றி கடகத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே புதனின் பெயர்ச்சி  5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 2, 2023, 03:37 PM IST
  • புதன் பெயர்ச்சி சுபப் பலன்களைத் தரும்
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீரென்று நிறைய பணம் கிடைக்கும்.
  • துலாம் ராசிக்காரர்களுக்குப் புதிய வேலையைத் தரும்.
இந்த 5 ராசிகளுக்கு 'புதன்' பண மழையை பொழிவார்.. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் title=

கடக ராசியில் புதன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் அதிபதியான புதனின் பெயர்ச்சி செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் ஜூலை 8, ஆம் தேதி 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்கு புதன் கடக ராசிக்குள் பெயர்ச்சியடையப் போகிறார். கடகத்தில் புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். எந்த பெரிய வேலையையும் முடிக்க முடியும். எனவே புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுபப் பலன்களைத் தரும்

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி (Budh Gochar 2023) பல நன்மைகளைத் தரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீரென்று நிறைய பணம் கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். துணையுடன் நன்றாக இருப்பீர்கள். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை பெரிய அளவில் உயரும். விருப்பமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

மேலும் படிக்க | சிம்ம ராசியில் செவ்வாய்... ஆனால் அந்த ஒரு ராசிக்கு அதிக பலன்கள் - நிலம் வாங்க ஏற்ற நேரம்!

கன்னி: புதனின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்குப் போதிய பண வரவைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். அனைத்து பெரிய ஆசையும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சம்பள உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு. வணிக வகுப்பினருக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

துலாம்: புதன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்குப் புதிய வேலையைத் தரும். பணத்துடன் பதவியையும் பெறுவீர்கள். அதே நேரத்தில், தற்போதைய வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசி தொழிலதிபர்களுக்கு, இது நல்ல பலனைத் தரும். பொன்னான வாய்ப்பு கிடைக்கலாம். பணியில் அர்ப்பணிப்புடன் இருங்கள். நீங்கள் விரும்பும் செயல்களில் நேரத்தை செலவிடுவது நன்மை பயக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி (Budh Rashi Parivartan 2023) பல வகையில் நன்மைகளை தரும். புது மக்களை சந்தியுங்கள். மகர ராசிக்காரர்கள் எதிர்காலத்தில் பயனடைவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நன்றாகப் பழகுவீர்கள். பல மூலங்களிலிருந்து பணம் வருவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் உருவாகும். நிறுத்தப்பட்ட பணம் எளிதில் திரும்பப் பெறப்படும். தீவிர பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

மீனம்: மீன ராசிக்காரர்களின் வாழ்வில் புதன் பெயர்ச்சி பொன்னான நாட்களைத் தொடங்கும். மீன ராசிக்காரர்கள் ஆற்றல் தொடர்ந்து அதிகரிக்கும். நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். புதிய தொழிலில் முயற்சி செய்யலாம். திருமணம் நிச்சயிக்கப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கடகத்திற்கு வரும் புதன்... இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் தூள் பறக்கும் - செல்வம் செழிக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News