பங்களாதேஷ்த்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சிறுவனின் தந்தை பந்தை வீச, அதை அந்த சிறுவன் அழகாக ஆப்-சைடில் அடுத்து விளையாடுகிறார். இதைப்பார்த்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறுவனை பாராட்டி உள்ளது. மேலும் அவருக்கு விருது அறிவித்து கவுரவித்துள்ளது.
இதைக்குறித்து ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
இந்த சிறுவனுக்கு இரண்டு வயது தான். ஆனால் இவனது ஆப்-சைடு டெக்னிக் முற்றிலும் அழகாக உள்ளது. நீ தான் ஐசிசியின் "ஃபேன் ஆஃப் தி வீக்" என்று கவுரவித்துள்ளது. இன்னும் கொஞ்சம் உன் தந்தையிடம் கற்றுக்கொள். ஒரு நாள் வங்கதேச அணிக்காக விளையாடுவாய் என கூறியுள்ளது.
He's only two, but his off-side technique is absolutely gorgeous
Strike a pose Ali - you are the ICC's Fan of the Week! With some more throw-downs from dad, you could very well be playing for Bangladesh one day pic.twitter.com/wXMdeOpAAw
— ICC (@ICC) July 26, 2018