கடந்த முறை 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானில் இப்போது ஆசிய கோப்பை தொடர் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் களமிறங்கியுள்ளன.
இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றடைந்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லகல்லே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மோத இருப்பதால் கிரிக்கெட் உலகமே இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: நேரலை மற்றும் இலவசமாக எந்த ஓடிடி, தொலைக்காட்சியில் பார்க்கலாம்?
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறும் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. ஏனென்றால், இரு அணிகளும் மோதும் நாளன்று, அதாவது சனிக்கிழமை பல்லக்கலே மைதானத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வெதர்.காம் இணையதளத்தின்படி, இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாளில், பல்லக்கல்லே மைதானம் அமைந்திருக்கும் பகுதியில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. அக்குவெதர் தளத்தின்படியும் சனிக்கிழமையன்று 89% மழைப்பொழிவுக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மழை பெய்யவில்லை என்றாலும் அன்றைய நாள் முழுவதும் கடுமையான மேகமூட்டம் சூழ்ந்திருக்கும் என அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது. அதாவது, வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கும் என்றும், உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு அதாவது போட்டி தொடங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 34.6 மிமீ மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது.
இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் மோதின. விறுவிறுப்பின் உச்சத்தில் நடைபெற்ற இப்போட்டியில் விராட் கோலி 19வது ஓவரை வீசிய ஹரீஸ் ராவுப் பந்துவீச்சில் மெகா சிக்சர்களை அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியை கிரிக்கெட் உலகம் இன்னும் மறக்கவில்லை. அந்த நிலையில் தான் இப்போது ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதுவதை கிரிக்கெட் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். வருண பகவான் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு வழிவிடுவாரா?
மேலும் படிக்க | ஆசிய கோப்பையில் அதிக வெற்றிகளை குவித்த 7 கேப்டன்கள்... யார் யார்னு பாருங்க?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ