சிஎஸ்கே போட்டிகளுக்கு சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க முடியாது... இனி ஆன்லைன் மட்டுமே!

CSK vs RCB Online Ticket Sales: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 11, 2024, 07:42 PM IST
  • டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைனில் நடைபெறும் என தகவல்
  • கடந்த முறை கவுண்டர் டிக்கெட்களில் பல மோசடிகள் நடைபெற்றன.
  • ஓடிஐ உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனிலேயே முழுமையாக நடைபெற்றது.
சிஎஸ்கே போட்டிகளுக்கு சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க முடியாது... இனி ஆன்லைன் மட்டுமே! title=

IPL 2024, CSK vs RCB Ticket Sales: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. குறிப்பாக, தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் முதல் போட்டியிலேயே காணப்போகும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

அது மட்டுமின்றி இந்த 17ஆவது சீசன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு சீசனுக்கும் இந்த பேச்சு அடிப்படும் என்றாலும் அடுத்தாண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களையே தக்கவைத்துக்கொள்ளும். எனவே, தோனி இந்த சீசனோடு ஐபிஎல் தொடரில் இருந்து விடை பெற இருக்கிறார் என அழுத்தம் திருத்தமாக கூறப்படுகிறது. 

ஐபிஎல் டிக்கெட் விற்பனை

கடந்த சீசனே தோனியின் கடைசி தொடர் என கூறப்பட்டதால், நாடு முழுவதும் சிஎஸ்கே அணி விளையாடிய அனைத்து போட்டிகளையும் காண மஞ்சள் ஜெர்ஸியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர் எனலாம். சென்னை மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, மும்பை என அனைத்து இடங்களிலும் தோனிக்கு பலத்த வரவேற்பு கிரிக்கெட் ரசிகர்கள் மூலம் கிடைத்தது எனலாம்.

மேலும் படிக்க | மீண்டும் வலுவான அணியாக மாறிய மும்பை இந்தியன்ஸ்! பிளேயிங் 11 இது தான்!

இந்த காரணத்தால், ஐபிஎல் டிக்கெட்டுகளின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டதாக பல்வேறு புகார்களும் எழுந்தன. எவ்வளவு தொகை கொடுத்தாவது தோனியின் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக கருப்பு சந்தையில் ரசிகர்கள் பல மடங்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய சம்பவத்தையும் நாம் பார்க்க முடிந்தது. குறிப்பாக, கவுண்டரில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள்தான் அதிகம் விலையில் கருப்பு சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனை போலியாக அச்சடித்து விற்பனை செய்த மோசடிகளும் நடந்தேறின. 

இதனால், ஐபிஎல் தொடருக்கு பின்னர் அக்டோபரில் நடைபெற்ற ஓடிஐ உலகக் கோப்பை போட்டிகளின் டிக்கெட்டுகள் முழுவதும் ஆன்லைனிலேயே விற்பனை செய்யப்பட்டது. உலகக் கோப்பை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டாலும் அதிலும் சில மோசடிகளை பார்க்க முடிந்தது. உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அனைத்தையும் பிசிசிஐ மேற்கொண்ட நிலையில், ஐபிஎல் தொடர்களில் அந்த மைதானங்களின் ஹோம் அணிகளே டிக்கெட் விற்பனை செய்யும். 

இனி ஆன்லைனில் மட்டும் டிக்கெட் விற்பனை

அதாவது, சென்னை சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமே மேற்கொள்ளும். இந்நிலையில், கடந்த முறை ஐபிஎல் லீக் போட்டிகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் முழுவதுமாக ஆன்லைனிலேயே டிக்கெட் விற்பனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 

மோசடிகளை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை என தெரிவிக்கப்பட்டாலும் ஆன்லைனில் டிக்கெட்டை சாதாரணமானவர்கள் எடுக்கவே முடியவில்லை என்பதும் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆன்லைனில் மட்டும் என்றால் டிக்கெட் விற்பனை தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 22ஆம் தேதி சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியும், மார்ச் 26ஆம் தேதி சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கும் இடையிலான போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | IPL 2024: மும்பை அணிக்கு பின்னடைவு! ஹர்திக் தலைமையில் ரோஹித் விளையாட போவதில்லை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News