உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மெக்சிகோ அணியை தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது!
FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் போட்டியிலேயே ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த மெக்சிகோ, தென் கொரியவுடன் மோதியது. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தென் கொரியா. ஆரம்பம் முதல் மெக்சிகோ முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது.
மெக்சிகோவின் கார்லோஸ் வேலா, லொசனோ மற்றும் ஹெர்னாண்டஸ் ஆகியோர் தொடர்ந்து அதிரடி அட்டாக் செய்து, தென் கொரியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். 26-வது நிமிடத்தின் போது, தென் கொரிய வீரர் கையால் பந்தை தடுத்தார். இதனால் நடுவர் மெக்சிகோவுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்தார். அதில், கார்லோஸ் வேலா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் சன் ஹியுங் மின் தலைமையில் தென் கொரியா தனது அதிரடியை காட்டியது. பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், தென் கொரியா கோல் முன் சொதப்பி வந்தது. 66வது நிமிடத்தில், மெக்சிகோ செய்த ஒரு சூப்பரான கவுன்ட்டர் அட்டாக்கின் முடிவில் மெக்சிகோவின் ஹெர்னாண்டஸ் கோல் அடித்து போட்டியை 2-0 என ஆக்கினார்.
கோல் அடிக்க முடியாமல் திணறி வந்த தென் கொரியாவின் சார்பாக, 90-வது நிமிடத்தில் சன் ஹியுங்-மின் அட்டகாசமான ஒரு கோல் அடித்தார். ஆனால், இறுதியில் மெக்சிகோ 2-1 என தனது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியை பதிவு செய்தது.