வணக்கம் தோனி, நீங்கள் ஓய்வு பெற விரும்புவதாக கேள்விப்பட்டேன்... லதா மங்கேஷ்கர்

இந்தியாவின் இசைச்குயில் என்று அனைவராலும் அழைக்கபடும் லதா மங்கேஷ்கர், எம்.எஸ் தோனியிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 11, 2019, 04:05 PM IST
வணக்கம் தோனி, நீங்கள் ஓய்வு பெற விரும்புவதாக கேள்விப்பட்டேன்... லதா மங்கேஷ்கர் title=

புதுடெல்லி: 2019 ஐ.சி.சி உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின்னர், எம்.எஸ்.தோனி குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் எம்.எஸ். தோனி மைதானத்தில் இருக்கும் வரை நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்ற எண்ணம் எல்லோரும் மனதில் இருந்தது. ஏன் எதிர் அணியினர் கூட தோனி இருக்கும் வரை வெற்றியை குறித்து நினைத்து பார்க்க வில்லை என்பதே உண்மை. ஆனால் தல தோனி அவுட் ஆனதும் இந்தியாவின் நம்பிக்கைகள் முறிந்தன. தோனி நோ-பந்தில் அவுட் செய்யப்பட்டார் என்று ஒருபுறம் விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. மற்றொரு புறத்தில் எம்.எஸ்.தோனி எப்பொழுது ஓய்வு பெறுகிறாரா? என்ற சர்ச்சையும் நடந்து கொண்டிருக்கிறது. 

தோனியின் ஓய்வு குறித்த கேள்வி சாதாரண கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் மட்டுமல்ல. இந்திய கேப்டன் விராட் கோலியிடமும் கேட்கப்பட்டது. நேற்று (புதன்கிழமை) போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கோஹ்லி பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தபோது, ​​ஒரு பத்திரிகையாளர் அதே கேள்வி அவரிடம் கேட்டார். அதாவது “உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும். தோனி ஓய்வு குறித்த செய்திகள் பரவி வருகின்றன. அவர் ஓய்வு பெறப்போகிறார் என்று கூறப்படுகிறது. இதுக்குறித்து எம்.எஸ் தோனி உங்களிடம் அல்லது அணி குழுவினரிடம் சொல்லியிருக்கிறார்களா? என செய்தியாளர் கேட்டார். அதற்கு விராட் இல்லை, அவர் இதுவரை ஓய்வு குறித்து எதுவும் சொல்லவில்லை' என்றார்.

எம்.எஸ்.தோனி எப்பொழுது ஓய்வு பெறுகிறாரா? என்ற விவாதம் நடந்துக்கொண்டு இருக்கும் நிலையில், இசைச்குயில் பாடகி லதா மங்கேஷ்கர் தோனிக்கு ஓய்வு பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், " வணக்கம் தோனி, சில நாட்களாக நான் கேள்வி படுகிறேன். நீங்கள் (தோனி) ஓய்வு பெறப்போகிறீர்கள் என்று. தயவு செய்து ஓய்வு பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நாட்டுக்கு உங்களோட அர்பணிப்பு மற்றும் விளையாட்டு ரொம்ப முக்கியம். உங்களிடம் என்னுடைய ஒரு அன்பான கோரிக்கை. ஒய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

ZeeNewsTamil

Trending News