IND vs BAN : டைவ் அடித்து ஷகிப் அல் ஹாசனை பழிவாங்கிய விராட் - மாஸ் மொமண்ட்

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 187 ரன்கள் என்ற இலக்கை துரத்தி தொடர்ந்து விளையாடி வருகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Dec 4, 2022, 05:43 PM IST
  • விராட் கோலியின் விக்கெட்டை ஷகிப் அல் ஹாசன் கைப்பற்றினார்.
  • கேஎல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று ஆடி 73 ரன்களை குவித்தார்.
IND vs BAN : டைவ் அடித்து ஷகிப் அல் ஹாசனை பழிவாங்கிய விராட் - மாஸ் மொமண்ட் title=

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. 

போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீர்ரகள் அடுத்தடுத்து நடையைக் கட்ட, 41.2 ஓவர்களிலேயே இந்திய அணி 186 ரன்களுக்கு ஆல்- அவுட்டானது. கேஎல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று ஆடி 73 ரன்களை எடுத்தார். 

வங்கதேச பந்துவீச்சு தரப்பில் ஷகிப் அல் ஹாசன் 5 விக்கெட்டுகளையும், ஹோசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குறிப்பாக, ஒருநாள் அரங்கில் ஷகிப் அல்-ஹாசன் சிறப்பான பந்துவீச்சு இதுவாகும். அவர் 10 ஓவர்களில் 2 ஓவர்கள் மெய்டனாக வீசி, 36 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

இதையும் படிக்க | இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கம்! காரணம் இதுதான்!

அந்த வகையில், அவரின் முதலாவது ஓவரிலேயே ரோஹித், விராட் என்ற மாபெரும் விக்கெட்டுகளை சரித்து, இந்திய அணியை தடுமாற செய்தார். அந்த ஓவரின் 2ஆவது பந்தில் ரோஹித் கிளீன் போல்ட் ஆன நிலையில், நான்காவது பந்தில் விராட் கோலி லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்த கடினமான கேட்சையும் லிட்டன் தாஸ் அசால்டாக பிடிக்க, விராட் கோலி வாயை திறந்தவாரே கிரீஸில் இருந்து புறப்பட்டார். 

இதற்கு பழிவாங்கும் தருணம், வங்கதேசத்தின் பேட்டிங்கின்போது, விராட் கோலிக்கு கிடைத்தது. அந்த அணியும் பேட்டிங்கில் ரன் அடிக்க திணறி வந்தாலும் விக்கெட் டுகளை இழக்காமல் இருந்து வந்தனர். இருப்பினும், வாஷிங்டன் சுந்தர் வீசிய 24ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஷகிப் அல்-ஹாசன் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

ஆனால், அந்த கேட்ச்சும் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அதை விராட் கோலி ஒரே கையில் டைவ் அடித்து பிடித்து, தன்னை அவுட்டாக்கிய ஷகிப் அல் ஹாசனை அதே பாணியில் வெளியேற்றி மாஸ் காட்டினார். தற்போது வங்கதேச அணி 26 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இன்னும் 24 ஓவர்களும், 6 விக்கெட்டுகளும் கையிலுருக்க வெற்றிக்கு 85 ரன்கள் தேவை என்ற நிலையில் வங்கதேசம் தொடர்ந்து விளையாடி வருகிறது. 

இதையும் படிக்க | மாயாஜால சுழலில் இந்திய அணியை சாய்த்த ஷகிப் அல்ஹசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News