#INDvSA முதல் டெஸ்ட்: நாளை வரலாற்றை மாற்றுமா? இந்திய அணி

தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் சென்றுள்ள இந்திய அணி நாளை தனது முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.

Last Updated : Jan 4, 2018, 04:27 PM IST
#INDvSA முதல் டெஸ்ட்: நாளை வரலாற்றை மாற்றுமா? இந்திய அணி title=

தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஒரே ஒருமுறை முன்னால் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது. இம்முறையாவது வரலாறு படைக்குமா? விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். 

கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த தொடக்க வீரர் ஷிகர் தவண் குணமடைந்து, அணிக்கு திரும்பி இருப்பது ஆறுதலான விசியம். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என்று கருதப்படுகிறது.

நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 10 மணிக்கு தொடங்கும்.

 

 

Trending News