ஐபிஎல் 2017: மாலை 4 மணிக்கு ஐதராபாத்தின் கோட்டையை தகர்க்குமா புனே?

Last Updated : May 6, 2017, 12:34 PM IST
ஐபிஎல் 2017: மாலை 4 மணிக்கு ஐதராபாத்தின் கோட்டையை தகர்க்குமா புனே? title=

இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. 

11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட முடியும். 

புனே அணி 11 ஆட்டங்களில் 7-ல் வெற்றி கண்டு 14 புள்ளிகளை சேகரித்துள்ளது. தொடக்கத்தில் தடுமாறினாலும் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்துள்ள புனே அணி. அந்த அணி கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட முடியும். 

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Trending News