ஆசிய விளையாட்டு போட்டி 2018: குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் அமித் பங்ஹால் தங்க பதக்கத்தை வென்றனர்...!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 14-ஆவது நாளான இன்று குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் அமித் பங்ஹால் தங்க பதக்கத்தை கைப்பற்றினார். இது இந்தியாவுக்கு 14 வது தங்க பதக்கம் ஆகும். இவர் அவர் உஸ்பெகிஸ்தான் ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மாடோவை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்றார். இந்த பதக்கத்தை 49 கிலோ எடை பிரிவில் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டி 2018 பதக்க பட்டியலில் 8 வது இடத்தில் உள்ள இந்தியா மொத்தம் 67 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 15 தங்கம், 23 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
#AsianGames2018 : India's Amit Panghal wins gold medal in Men's 49 kg Boxing final. pic.twitter.com/MffzC5w1xx
— ANI (@ANI) September 1, 2018