பாகிஸ்தான் அவுட்
உலக கோப்பை 2023 தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசி லீக் போட்டியில் களம் கண்டுள்ளன. தொடரின் ஆரம்பத்தில் இருந்து மிக மோசமாக விளையாடிய இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், அடுத்து வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக நெதர்லாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இப்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் முனைப்பில் இருக்கிறது. மறுபக்கம், பாகிஸ்தான் அணிக்கு மையிரிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. டாஸ் வெற்றி பெற்று அந்த அணி பேட்டிங் விளையாடி இருந்தால் பாயிண்ட் ஒரு விழுக்காடு வாய்ப்பில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அந்த அணி உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியிருக்க முடியும்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் - வாசிம் அக்ரம் கொடுத்த பலே பிளான்..!
அதிர்ஷ்டம் இல்லாத பாபர்
ஆனால், டாஸ் மூலம் அந்த அதிர்ஷ்டம் கூட பாகிஸ்தான் அணிக்கு கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியிருக்கிறது. ஏனென்றால் டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங் எடுத்துவிட்டார். அவர் பவுலிங் எடுத்திருந்தால் கூட பாகிஸ்தான் அணிக்கு அந்த பாயிண்ட் ஒரு விழுக்காடு வாய்ப்பு இருந்திருக்கும். அதற்குகூட டாஸிலேயே முற்றுப் புள்ளி வைத்து, எங்களுடன் வாருங்கள் என அழைத்துக் கொண்டார் ஜாஸ் பட்லர். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பட்லர் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் சமூக ஊடகங்களில் பட்லரை விமர்சிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.
பட்லர் வைத்த செக்
டாஸ் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேசும்போது, கொல்கத்தா பிட்ச் நன்றாக இருப்பதால் முதலில் பேட்டிங் ஆட விரும்புகிறோம். இதுவரை நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாவில்லை என்றாலும் கடந்த போட்டியில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். அவருக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம், நாங்கள் டாஸ் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் முதலில் பேட்டிங் தான் விளையாடியிருப்போம். ஆனால் டாஸ் எங்களது கையில் இல்லை. இருப்பினும் எங்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து இங்கிலாந்து அணியை மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வைக்க முயற்சிப்போம். அதேபோல் பக்கார் ஜமானின் பேட்டிங் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.
பாபரை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்
அவரின் இந்த நம்பிக்கையான வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் முகம் சுளிக்காத குறை ஒன்று தான். ஏனென்றால் டாஸ் தோற்றிக்கும் இந்த நேரத்தில் இங்கிலாந்து அணி 300 ரன்கள் அடித்தால் அதனை 6 ஓவரில் சேஸ் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு. அப்படியான சூழலில் நம்பிக்கையாக பேசுகிறோம் என அதீதத்திற்கும் அதீதமான நம்பிக்கையில் பாபர் ஆசம் பேசியிருப்பதாக ரசிகர்கள் அவரை கிண்டலும் அடித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கங்குலி போட்ட கண்டிஷன்.. வேற வழியில்லாமல் ஏத்துக்கிட்ட ரோகித் சர்மா...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ