தமிழக வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி

இன்று ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று தமிழக வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கினார்.

Updated: Aug 29, 2017, 05:23 PM IST
தமிழக வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி
Pic Courtesy : ANI

டெல்லி: இன்று ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று தமிழக வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கினார்.

மத்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த வாரம் விருது பட்டியலை வெளியிட்டது. அதன் படி இன்று ஜனாதிபதி மாளிகையில் தமிழக வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதுகள் வழங்கினார். பார ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, திருச்சியைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கியராஜ், போளூரைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அந்தோணி அமல்ராஜ் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் அர்ஜூனா விருதுடன், ரூ 5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

 

 

அதேபோல மற்ற விருதுகலும் வீரகளுக்கு வழங்கப்பட்டது. அதன் பட்டியலை பார்க்கவும்:-

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது:-
2 பேருக்கு விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.

1.தேவேந்திர ஜாஜாரியா (பாரா ஒலிம்பிக் தடகளம்) 
2.சர்தார் சிங் (ஹாக்கி) 

 

 

தயான்சந்த் விருது:-
3 பேருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதுகள் வழங்கப்பட்டன.

1.புபேந்திர சிங் (தடகளம்) 
2.சையத் ஷாகித் ஹகீம் (கால்பந்து) 
3.சுமராய் டீடே (ஹாக்கி) 

துரோணாசாரியார் விருது:- 
7 பேருக்கு பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்பட்டன.

1.மறைந்த ஆர். காந்தி (தடகளம்) 
2.ஹீரா நந்த் கடாரியா (கபடி) 
3.சி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மின்டன்) 
4.பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை) 
5.பி.ஏ. ரபேல் (ஹாக்கி) 
6.சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்) 
7.ரோஷன் லால் (மல்யுத்தம்) 

அர்ஜூனா விருது:
17 பேருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன.

1.மாரியப்பன் (பாரா உயரம் தாண்டுதல்)
2.ஓ. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்) 
3.அரோக்கிய ராஜிவ் (தடகளம்)
4.வி.ஜே. சுரேகா (வில்வித்தை) 
5.குஷ்பிர் கவுர் (தடகளம்) 
6.பிரசாந்தி சிங் (கூடைப்பந்து) 
7.லைஷ்ராம் தேபேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை) 
8.சதேஸ்வர் புஜாரா (கிரிக்கெட்) 
9.ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்) 
10.ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து) 
11.எஸ்.எஸ்.பி., சவ்ராசியா (கோல்ப்) 
12.எஸ்.வி. சுனில் (ஹாக்கி) 
13.ஜஸ்விர் சிங் (கபடி) 
14.பி..என். பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்) 
15.சாகேத் மைனேனி (டென்னிஸ்) 
16.சத்யவிரத காடியான்(மல்யுத்தம்)  
17.வருன் சிங் பட்டி (பாரா தடகளம்)