அறிமுக நாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் பிளாஸ்டர்!

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ள ப்ரத்வி ஷா-விற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளளார்!

Updated: Oct 6, 2018, 10:27 AM IST
அறிமுக நாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் பிளாஸ்டர்!

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ள ப்ரத்வி ஷா-விற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளளார்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 293-வது வீரராக களமிரங்கியுள்ள அறிமுக வீரர் ப்ரத்வி ஷா தனது முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கொட் சௌராஸ்ட்ரா கிரிக்கட் மைதானத்தில் ஆகஸ்ட 4-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 0(4) ரன் ஏதும் இன்றி வெளியேற மற்றொரு தொடக்க வீரரான ப்ரித்திவி ஷா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இப்போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமான இவர் முதல் போட்டியிலேயே அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 134(154) ரன்கள் குவித்தார்.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அறிமுக நாயகனுக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதாவது.... "முதல் போட்டியில் பயம் அறியாது அசத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ப்ரத்வி, பயமில்லா பயணம் தொடரட்டும்" என தெரிவித்துள்ளார்!