ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்!
All England Open Badminton 2019 தொடர் பர்மிங்ஹாம்-ல் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
Last year's SF at @YonexAllEngland , @Pvsindhu1 fought like a warrior savin atch points to keep herself in the hunt but Korea's #SungJiHyun secured the thriller of a contest at 21-16,20-22,21-18 in the end that lasted over an hour. Tough luck girl! #IndiaontheRise #YAE19 pic.twitter.com/fJL7LxchJl
— BAI Media (@BAI_Media) March 6, 2019
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றுப் போட்டியில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூன் - ஐ எதிர்த்து விளையாடினார்.
16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த பி.வி.சிந்து, இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி 22-20 என்ற புள்ளியில் செட்டை கைப்பற்றினார். பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் பி.வி. சிந்து 18-21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சுமார் 80 நிமிடங்கள் நீடித்த இப்போட் பார்வையாளர்களை இறுக்கையின் முனையில் அமர வைத்தது.