ஐபிஎல் 2024 : சன்ரைசர்ஸ் - குஜராத் போட்டி மழையால் ரத்து ! பிளே ஆஃப் சுற்றில் கம்மின்ஸ் டீம்

ஹைதராபாத்தில் இடைவிடாமல் மழை பெய்ததால் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஹைதராபாத் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2024, 10:51 PM IST
  • பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்
  • மூன்றாவது அணியாக இடத்தை உறுதி செய்தது
  • நான்காவது இடத்துக்கு சிஎஸ்கே, ஆர்சிபி போட்டி
ஐபிஎல் 2024 : சன்ரைசர்ஸ் - குஜராத் போட்டி மழையால் ரத்து ! பிளே ஆஃப் சுற்றில் கம்மின்ஸ் டீம் title=

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எஞ்சிய 2 இடங்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில், மூன்றாவது இடத்தை இன்று உறுதி செய்திருக்கிறது சன்ரைசர்ஸ் அணி, வருணபகவான் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்ததால் ஒருபந்து கூட வீசப்படாமல் இன்றைய ஐபிஎல் போட்டி கைவிடப்பட்டது. இதனையடுத்து 10. 15 மணி வரை காத்திருந்த நடுவர்கள், அதன்பிறகு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

மேலும் படிக்க | CSK: ஷாக்கில் சிஎஸ்கே... 5 வீரர்கள் இல்லை - என்ன செய்யப்போகிறார் ருதுராஜ்?

இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்ட நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆப் சுற்றை மூன்றாவது அணியாக உறுதி செய்திருக்கிறது சன்ரைசர்ஸ் அணி. அந்த அணி இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவியிருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் மொத்தம் 15 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. அடுத்து விளையாட இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோல்வியை தழுவினால், ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் ஒன்றில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். 

அதேநேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியிருக்கிறது. அந்த அணி இதுவரை விளையாடிய  14  போட்டிகளில் 5ல் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவியிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து வெளியேறியுள்ளது. இப்போது மூன்று அணிகள் ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்திருக்கும் நிலையில் நான்காவது இடத்துக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணிகள் போட்டி போட இருக்கின்றன.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 18 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் 18 ரன்களுக்கும் அதிகமாக அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளே ஆஃப் வாய்ப்பை தட்டிப் பறித்து, ஆர்சிபி அணி முன்னேற வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News