இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பொறுப்பு -சுரேஷ் கல்மாடி மறுப்பு

ஆயுட்கால சங்க தலைவர் பதவிக்கு ஊழல் செய்துள்ள சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது சுரேஷ் கல்மாடி  பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 28, 2016, 07:43 PM IST
இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பொறுப்பு -சுரேஷ் கல்மாடி மறுப்பு  title=

புதுடெல்லி: ஆயுட்கால சங்க தலைவர் பதவிக்கு ஊழல் செய்துள்ள சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது சுரேஷ் கல்மாடி  பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் வருடாந்திர பொது கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபேசிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க புதிய ஆயுட்கால தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் இது கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. முன்னாள் காங்கிரஸ் அமைச்சரான சுரேஷ் கல்மாடி காமன்வெல்த் ஊழலில் சிக்கியவர். அபய் சவுதாலா மீதும் விளையாட்டு தொடர்பான ஊழல் புகாரில் சிக்கியவர்கள்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழலில் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டார். இதன் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

அதேபோல், 2012-14 வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக அபே சிங் சவுதாலா இருந்தார். பின்னர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 2014-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த அறிவிப்புக்கு மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

"இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த தீர்மானம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல" என்று கூறியுள்ளார்.

Trending News