டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்பு

Virat Kohli T20 World Cup : டி20 உலக  கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2024, 03:53 PM IST
  • டி20 உலக கோப்பையில் விராட் கோலி தடுமாற்றம்
  • மூன்று போட்டிகளிலும் மிக சொற்ப ரன்களுக்கு அவுட்
  • சூப்பர் 8 சுற்றில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்க வாய்ப்பு
டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்பு title=

இப்போது நடக்கும் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கினார்.  இந்த மூன்று போட்டிகளிலும் முறையே 1,4,0 என மிக மோசமாக விளையாடி அவுட்டானார். இந்திய அணி இந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அவருடைய மோசமான பார்ம் கவலையளிக்கிறது. அடுத்ததாக சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆட இருப்பதால், அதில் அவரை நம்பர் 3 ஸ்லாட்டில் விளையாட வைக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏனென்றால், விராட் கோலி இந்திய அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்கி தான் பல சாதனைகளை படைத்திருக்கிறார். 

மேலும் படிக்க | USA vs IND: இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 அமெரிக்க வீரர்கள்...!

ரோகித் சர்மாவுடன் யார் ஓப்பனிங் இறங்குவார்?

ஒருவேளை விராட் கோலி மூன்றாவது இடத்தில் இந்திய அணியில் மீண்டும் களமிறங்கினால் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்குவது யார்? என்ற கேள்வி எழலாம். பிளேயிங் லெவனை மாற்றவில்லை என்றால், ரோகித்துடன்  ரிஷப் பன்ட் தான் ஓப்பனிங் இறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் பலமுறை ஓப்பனிங் விளையாடி அனுபவம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஓப்பனிங் இறங்கிய சிறப்பாக ஆடியிருக்கிறார் ரிஷப் பன்ட். 

பினிஷர் ரோலில் ஷிவம் துபே

அப்போது, பினிஷர் ரோல் இயல்பாக ஷிவம் துபேவுக்கு செல்லும். ஐபிஎல் போட்டிகளில் நல்ல பார்மில் இருந்ததால் தான் அவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் விராட் கோலியைப் போன்று அவரும் கடந்த மூன்று டி20 உலக கோப்பை போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை. அதனால் அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிவிட்டு யஷஸ்வி ஜெய்ஷ்வால் அல்லது சஞ்சு சாம்சனை ஓப்பனிங் களமிறக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதனால், டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இப்போது குரூப்8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் மோத இருக்கிறது. ஒவ்வொரு குரூப்பிலும் தலா 4 அணிகள் இருக்கும். ஒவ்வொஒரு அணியுடன் தலா ஒருமுறை மற்ற அணிகள் மோத வேண்டும். முடிவில், டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த சுற்றில் போட்டி கடினமாக இருக்கும் என்பதால் இந்திய அணி விரைவில் பிளேயிங் லெவனில் அல்லது பேட்ஸ்மேன்களின் ஆர்டரில் மாற்றம் செய்து சிறப்பான ஆட்டத்தை ஆட வேண்டும் எனவும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : சூப்பர்8 சுற்றில் இந்திய அணிக்காகவே வரும் 2 டம்மி டீம்கள்..!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News