பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை - வெளுத்து வாங்கிய வெங்சர்க்கார்

ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வெல்லாததற்கு பிசிசிஐ தேர்வுக்குழு மட்டுமே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 19, 2023, 11:14 PM IST
  • ஐசிசி கோப்பைகளை ஏன் வெல்லவில்லை?
  • பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவே காரணம்
  • இந்திய அணி மீது வெங்சர்க்கார் கடும் சாடல்
பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை - வெளுத்து வாங்கிய வெங்சர்க்கார் title=

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தி டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துக் கொள்வதாகவும், முக்கியமான ஐசிசி தொடர்களில் எந்த ஒரு வெற்றியையும் இந்திய அணி பெறுவதில்லை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். டெஸ்டில் நம்பர் 1 பவுலரான அஸ்வினை வெளியே உட்கார வைத்துவிட்டு ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாட எப்படி மனது வருகிறது? இது எந்த மாதிரியான முடிவு என்றே தெரியவில்லை என்றும் சாடியுள்ளனர்.

மேலும் படிக்க |  இதனால் தான் எனக்கு இந்திய கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை - அஸ்வின்!

அந்த லிஸ்டில் இப்போது திலீப் வெங்சர்க்காரும் இணைந்துள்ளார். அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற ஐசிசி தொடர்களில் இந்திய அணி வெல்லாமல் போவதற்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவே காரணம் என விமர்சித்துள்ளார். அவர் பேசும்போது, “கடந்த 6 – 7 வருடங்களில் தேர்வுக் குழுவினரிடம் தொலைநோக்கு பார்வையும் ஆழமான கிரிக்கெட் அறிவும் அல்லது நுணுக்கங்களும் இல்லாமல் இருப்பதை நான் பார்ப்பது துரதிஷ்டவசமாகும். குறிப்பாக வெளிநாட்டு தொடர்கள் வரும் போதும் முதன்மை வீரர்கள் இல்லாத போதிலும் அவர்கள் ஷிகர் தவானை கேப்டனாக நியமித்தனர். இவ்வாறு தான் அவர்கள் வருங்கால இந்திய கேப்டனை உருவாக்குகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும்” என்று கூறினார்.

அதை விட கடந்த ஃபைனலில் முழுமையாக தயாராமல் களமிறங்கியதால் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியில் எந்த பாடத்தையும் கற்காத பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு போதிய நேரத்தை கொடுக்காமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பச்சைக்கொடி காட்டிய ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஐபில் தொடரில் கிடைக்கும் பணம் மட்டுமே முக்கியம் என்றால் ஐசிசி தொடர்களில் இப்படி தோல்வியை சந்திப்பது தான் மிஞ்சும், இது தான் முக்கியமா? என்றும் வினவியிருக்கிறார். 

“வருங்காலத்தை கருத்தில் கொண்டு யாரையும் பிசிசிஐ வளர்க்கவில்லை. மாறாக வளர்ந்து வருபவர்களை அப்படியே விளையாட விடுகிறீர்கள். இந்தியா உலகின் மிகவும் பணக்கார வாரியம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்களுடைய பெஞ்சில் இருக்கும் வீரர்களின் பலம் என்ன? நீங்கள் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு ஒப்பந்தத்தால் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக சம்பாதிப்பதை மட்டும் சாதனையாக பார்க்க கூடாது” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மேலும் படிக்க | இவர்களுக்கு ஓய்வு தான் கரெக்ட்... சீனியர் வீரர்களை கழட்டிவிட சொல்லும் ஹர்பஜன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News