நேற்று நடைபெற்ற பிக் பாஷ் தொடர் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி முதலில் விளையாடி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆட வந்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஜேக் வெதரஹுட் மற்றும் பென் லாபுலின் இருவரும் சேர்ந்து பிடித்த கேட்ச் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் வீடியோ இணைக்கப்பட்டு உள்ளது.
வீடியோ:
'The best catch you'll ever see!' https://t.co/4eMXu8cUiG #BBL07 pic.twitter.com/7PQd5qp3xC
— KFC Big Bash League (@BBL) January 22, 2018
Ridiculous! #BBL07 pic.twitter.com/QY4YN6zFGg
— cricket.com.au (@CricketAus) January 22, 2018
அந்த வீடியோவில் பந்து காற்றில் பறந்து செல்கிறது. ஆனால் பென் லாபுலின் ஓடி வந்து பந்தை பிடித்துக்கொண்டார். பென் தூரத்திலிருந்து ஓடி வந்ததால், அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனவே அவர் எல்லைக் கோட்டை கடக்க ஆரம்பித்தவுடன், தன் கையில் இருந்த பந்தை மைதானத்தை நோக்கி வீசினார். பின்னால் நின்ற ஜேக் வெதரஹுட் டைவ் மூலம் அந்த பந்தை கேட்ச் பிடித்தார்.