67th National Award: பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது

2019 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2021, 05:38 PM IST
  • சென்ற வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
  • ஏப்ரல் மாத்தில், முந்தைய ஆண்டும் வெளியான திரைப்படங்களில் சிறந்த படங்கள் தேர்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் அறிவிக்கப்படும்.
67th National Award: பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது  title=

7வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறப்பு தேசிய விருதுடன் கூடவே சிறந்த, ஒலிப்பதிவுக்கான விருதையும்  ஒத்தசெருப்பு பெற்றுள்ளது. ஒத்த செருப்பு திரைப்படத்தை பார்த்திபன் இயக்கி நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது தவிர விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார்.

மேலும், சிறந்த துணை நடிகர் விருதிற்காக சூப்பர் டீலக்ஸ் படத்தில்  நடிகர் விஜய் சேதுபதிக்கு விருது என தேசிய விருதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கியிருந்தார். 

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத்தில், முந்தைய ஆண்டும் வெளியான திரைப்படங்களில் சிறந்த படங்கள் தேர்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்ற திரப்படங்கள் அறிவிக்கப்படும். 

ஆனால், சென்ற வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.  

 

 

Trending News