ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் மற்றும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆனூர் ஜெகதிசன் உட்பட 8 பேர் இதுவரை பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், 70க்கும் மேற்பட்டோர் தமிழிலகத்தில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்திற்கு புகார் கடிதங்களையும் அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக சரவணனுக்கு வரும் 22 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரமாணப்பத்திரங்களை அனுப்பியுள்ளவர்களுக்கு தொடர்ந்து சம்மனும் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த அழைப்பாணையின் படி அவர்கள் அடுத்தடுத்த நாட்களில் ஆஜராவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.