ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்தனர் அமித்ஷா, அருண் ஜெட்லி

Last Updated : Oct 12, 2016, 03:28 PM IST
ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்தனர் அமித்ஷா, அருண் ஜெட்லி  title=

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலி தாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை யின்  நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா எம்பி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, மனித நேயமக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் உள்ளிட்ட பலர் அப்போலோ மருத்துவம னைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

டெல்லியில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். பிறகு முதல் அமைச்சர் உடல் நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டனர். அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேசினார்கள். அவர்களுடன் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை மற்றும் எச்.ராஜா, இல.கணேசன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். பின்னர் இருவரும் புறப்பட்டு சென்றனர்.

 

 

 

 

Trending News