PPF account Activation | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய வழிமுறையாகும். அதிக வட்டி, வரி இல்லா சேமிப்பு மற்றும் சேமித்த பணத்துக்கு உத்தரவாதம் காரணமாக இந்திய மக்கள் பலரும் இந்த திட்டத்தில் நிறைய பணம் முதலீடு செய்கின்றனர். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிக தொகை வேண்டும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படி எல்லாம் இல்லை. இந்திய குடிமகனாக இருப்பவர்கள் PPF கணக்கில் முதலீடு செய்ய விரும்பினால் ஆண்டுக்கு வெறும் 500 ரூபாய் கூட நீங்கள் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
பிரிவு 80C இன் கீழ் PPF இல் முதலீடு செய்தால் வரி விலக்கு கிடைக்கும். மேலும், வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையான ரூ.500 டெபாசிட் செய்யப்படாவிட்டால், பிபிஎஃப் கணக்கு செயலிழந்துவிடும். PPF கணக்கில் பல வசதிகள் உள்ளன. ஒருவேளை ஆண்டுக்கு 500 ரூபாய் கூட நீங்கள் முதலீடு செய்யாமல் இருந்தால் உங்கள் கணக்கு தானாகவே முடங்கியிருக்கும். இதனால், கடன் வசதி மற்றும் பகுதியளவு திரும்பப் பெறுதல் ஆகியவை நிறுத்தப்படும்.
அப்படி என்றால் மீண்டும் உங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை திறக்க முடியாதா என்றால் முடியும். உங்கள் PPF கணக்கு மூடப்பட்டுவிட்டால், அச்சப்படத் தேவையில்லை. அதை எளிதாக ரீ ஆக்டிவேட் செய்யலாம். PPF கணக்கு என்பது பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிமுறை மட்டுமல்ல, வரிச் சேமிப்பு மற்றும் அதிக வட்டி விகிதத்துடன் பல நன்மைகளையும் வழங்குகிறது. எனவே, உங்கள் PPF கணக்கு செயலற்றதாக இல்லை என்பதை உறுதிசெய்து, ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச தொகையை அதில் டெபாசிட் செய்யவும். ஒருவேளை கணக்கு முடக்கப்பட்டிருந்தால் எப்படி மீண்டும் ஆக்டிவேட் செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் PPF கணக்கை எவ்வாறு செயல்படுத்துவது?
* முதலில், உங்கள் PPF கணக்கு திறக்கப்பட்டுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் செல்லவும்.
* கணக்கை மீண்டும் செயல்படுத்த, நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
* நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யாத ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.
* ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும்.
அபராதம் எவ்வளவு இருக்கும்?
உங்கள் PPF கணக்கு 4 வருடங்கள் செயல்படாமல் இருந்தால், நீங்கள் 4 ஆண்டுகளுக்கு ரூ 2000 (ஆண்டுக்கு ரூ 500) டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு ரூ.200 (ஆண்டுக்கு ரூ.50) செலுத்த வேண்டும்.
முதிர்வுக்கு முன் கணக்கை மூடலாம்
2016 ஆம் ஆண்டு முதல் இந்த கணக்கை முன்கூட்டியே மூடிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உயிருக்கு ஆபத்தான நோய் அல்லது குழந்தையின் கல்விச் செலவுகள் போன்ற சில சூழ்நிலைகளில் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு அரசாங்கம் அனுமதித்தது. ஆனால், இந்த வசதி 5 வருட முதலீட்டிற்குப் பிறகுதான் கிடைக்கும்.
மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ