15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மதுரை, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 17, 2022, 05:58 PM IST
  • வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
  • சென்னை வானிலை ஆய்வு மையம்
  • மழைக்கு வாய்ப்பு
15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் title=

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்தச் சூழலில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்தது.இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், தென்காசி, தேனி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உலகிலேயே அதிக வெப்பமான ஊர்! 53 டிகிரி செல்சியஸில் சூரியன் தகிக்கும் நகரம்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் 16 செ.மீ., தஞ்சை மாவட்டம் பேராவூரணி, காட்டுமன்னார்கோவிலில் தலா 6 செ.மீ., மதுக்கூரில் 5 செ.மீ., பட்டுக்கோட்டையில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | Space Tourism: விரிவாகும் விண்வெளி சுற்றுலா சந்தையில் ஆடம்பர சொகுசு அறை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News