உலகிலேயே அதிக வெப்பமான ஊர்! 53 டிகிரி செல்சியஸில் சூரியன் தகிக்கும் நகரம்

வெப்பம் தகிக்கிறது என்று கவலைப்படும் நமக்கு, நம்மை விட அதிக வெப்பத்தில் இருக்கும் மக்களைப் பற்றி தெரியுமா? உலகிலேயே அதிக வெப்பமான இடம் எது தெரியுமா?  

Last Updated : Apr 17, 2022, 03:58 PM IST
  • 53 டிகிரி செல்சியஸ் வெப்பம்
  • சூரியனின் அதிக தாக்கம் உள்ள ஊர்
  • உலகின் சூடான நகரம்
உலகிலேயே அதிக வெப்பமான ஊர்! 53 டிகிரி செல்சியஸில் சூரியன் தகிக்கும் நகரம் title=

Hottest Place in the world: புவி வெப்பமடைதல் காரணமாக, 2100 ஆம் ஆண்டளவில், உலக மக்கள் தொகையில் 74% பேர் வருடத்தில் 20 நாட்களுக்கு கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அனலாய் கொதிக்கும் உலகின் வெப்பமான இடம் பாகிஸ்தானின் ஜகோபாபாத் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பூமியின் மிகவும் வெப்பமான இடமான ஜகோபாபாத் (Jacobabad is the hottest place on Earth). இங்கு கோடையில் 52-53 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். ஜகோபாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இந்த கோடைக்காலத்தில் காலை கீழே வைக்கவே முடியாதாம்.

மேலும் படிக்க | வெப்பத்தைத் தணிக்க வேண்டுமா? இந்த ஜூஸ் குடிங்க

2018 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் டர்பட் (Pakistan's Turbat is the most hottest city in Asia) ஆசியாவின் வெப்பமான நகரமாக, மிக அதிகமான வெயிலால் பாதிக்கப்பட்டது.

உலகிலேயே மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட இடம் 'டானகில் டிப்ரஷன்'. இது உலகிலேயே பூமியில் மிகவும் தாழ்வான இடம். இது எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் இருக்கிறது.

world

புவி வெப்பமடைதல் காரணமாக, 2100 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 74% பேர் ஒரு வருடத்தில் 20 நாட்களுக்கு கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பால், புயல்கள், காட்டுத் தீ மற்றும் வெப்ப அலைகள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஜகோபாபாத் கடகரேகை மண்டலத்தில் அமைந்துள்ளது

UK, Loughborough பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் உதவிப் பேராசிரியரான Tom Matthews கருத்துப்படி, ஜகோபாபாத் கடகரேகை மண்டலத்தில் அமைந்துள்ளது.இதன் காரணமாக சூரியனின் நேரடி வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரபிக்கடலின் ஈரப்பதமான காற்றும், இங்கு நிலவும் அதிக வெப்பநிலைக்கு காரணமாகிறது.  

இது ஏன் உலகின் மிக வெப்பமான இடம்?

டனாகில் டிப்ரஷன் (Danakil Depression) என்பது Afar Triangle அல்லது Afar Depression,இது எத்தியோப்பியாவில் உள்ள வடக்குப் பகுதியாகும், இது ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) எனப்படும்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பத்தில் உள்ள மூன்று டெக்டோனிக் தட்டுகளின் வேறுபாட்டின் விளைவாக ஏற்பட்ட புவியியல் தாழ்வு ஆகும். 

மேலும் படிக்க | கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள சில டிப்ஸ்

இங்கு ஆண்டு முழுவதும் சராசரி வெப்பநிலை ஒரே மாதிரியாக இருக்கும். இங்கு சராசரி வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உள்ளது. இங்கு வெப்பமான காலநிலை நிலவினாலும், இங்கு மக்கள் தொகை அதிகமாகவே உள்ளது.

பொதுவாக, உலகின் பெரும்பாலான வெப்பமான இடங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு வெப்பமான கோடைகாலம் இருக்கும். ஆனால் இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது, மேலும் இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

டனாகில் டிப்ரஷன் (Danakil Depression), கடல் மட்டத்திலிருந்து 125 மீட்டர் கீழே உள்ளது. தனகில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில், அதிக வெப்பம் தவிர, மிகக் குறைந்த மழையே உள்ளது. ஒரு வருடத்தில் 100-200 மிமீ மழை மட்டுமே பெய்யும். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் நூற்றைம்பது மீட்டர் கீழே உள்ளது.

மேலும் படிக்க | கோடையில் திராட்சை அளிக்கும் அற்புத நன்மைகள்: பல வித நோய்களுக்கு ஒரே நிவாரணம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News