மாணவி தற்கொலை; விடுதிக்கு தீவைத்து மாணவர்கள்!!

சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் விடுதிக்கு மாணவர்கள் தீவைத்துள்ளனர்.

Last Updated : Nov 23, 2017, 09:40 AM IST
மாணவி தற்கொலை; விடுதிக்கு தீவைத்து மாணவர்கள்!! title=

சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் விடுதிக்கு மாணவர்கள் தீவைத்துள்ளனர்.

சென்னை சத்யபாமா கல்லூரியில் முதலாமாண்டு படித்த வந்த மாணவி தேர்வின் போது காப்பியடித்ததாக ஆசிரியர்கள் அந்த பெண்ணை கடுமையாக திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளனர்.

இதனால் பற்றி எரிந்த தீயால், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீசார் விரைந்து வந்தனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending News