செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

Senthil Balaji News : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் விரைவில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jul 21, 2024, 05:07 PM IST
  • செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு
  • சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
  • நாளை உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழக்கு விசாரணை
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

Senthil Balaji News Latest : செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறை மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில், மேல்சிகிசைச்சாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் பதற்றமடைந்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source

செந்தில் பாலாஜி சிறைவாசம்

2021 ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றதும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு என இரண்டு வழக்குகளும் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் விசாரணைக் கைதியாக சுமார் ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறையில் இருந்து வருகிறார். அதனால் அவருக்கு ஜாமீன் கேட்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | துணை முதலமைச்சர் பதவியை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் - அமைச்சர் துரைமுருகன்!

ஜாமீன் மனு மீது விசாரணை

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 22 ஆம் தேதி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நேரத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், இதனையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கவனத்துக்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் நாளை கொண்டு செல்ல இருக்கின்றனர்.

அதேபோல், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். அந்த வழக்கிலும் நாளை செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் தான் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் நாளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரவாரா? அல்லது இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு இதுவரை

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. 48 முறை நீதிமன்ற காவல்நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இம்முறை ஜாமீன் கிடைக்கும் என அவரது வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கு பெரிய காரணம் எல்லாம் இல்லை என கூறும் வழக்கிஞர்கள், இம்முறை அதனை தள்ளிப்போட எந்த வாய்ப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News