MK Azhagiri: 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகார் குறித்து அப்போதைய மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் சென்று வீடியோ எடுத்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மதுரை முன்னாள் துணை மேயர் PM மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | இனி மாஞ்சோலை மலைக்கு சுற்றுலா செல்லலாம்... கட்டுபாடுகளுடன் அனுமதித்த வனத்துறை!
இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுவரை நடைபெற்ற நிலையில் 2020ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதில் சிலர் பிறழ்சாட்சியும் அளித்திருந்தனர்.
#NewsUpdate | மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை#ZeeTamilNews | #MKAzhagiri | #MaduraiHC
Android Link: https://t.co/9DM6X6ZLY6
Apple Link: https://t.co/3ESH9sHwd3 pic.twitter.com/O7uDB8ndXP— Zee Tamil News (@ZeeTamilNews) February 16, 2024
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் ,செந்தில், பொன்னம்பலம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உள்ளிட்ட 17 பேர் நேரில் ஆஜராகினர்.
பின்னர் மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பை வாசித்தார். இதனையடுத்து மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரும் புறப்பட்டு சென்றனர். 73 வயதான அழகிரி 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்தார். குறிப்பாக, 2009-2014 காலகட்டத்தில் மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும் படிக்க | 'தலைவர் is back’ ஜாமீனில் வெளியே வந்து ஆடியோ வெளியிட்ட Myv3ads நிறுவனர் சக்தி ஆனந்த்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ