அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது!! 

Last Updated : Aug 12, 2019, 02:22 PM IST
அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது!! 

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளதாகவும, அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள், அடுத்த இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது சத்தீஸ்கர் நோக்கிச் செல்லும் பட்சத்தில் கேரளாவில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலாவில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஒரு சில இடங்களில் பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

More Stories

Trending News