வைகை ஆற்றில் வாடிவாசல் - காளைகளை அடக்கி விளையாடும் சிறுவர்கள்

வைகை ஆற்றில் வாடிவாசல் உருவாக்கி சிறுவர்கள் விளையாடி வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 27, 2022, 12:00 PM IST
  • வைகை ஆற்றில் வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு
  • காளைகளுடன் ஆபத்தான முறையில் விளையாடும் சிறுவர்கள்
  • போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வைகை ஆற்றில் வாடிவாசல் - காளைகளை அடக்கி விளையாடும் சிறுவர்கள் title=

மதுரை என்றாலே பெரும்பாலும் சட்டென ஞாபகத்துக்கு வருவது கள்ளழகர் திருவிழாவும், ஜல்லிக்கட்டுப் போட்டியும்தான். மதுரையை பொருத்தவரையில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு  போட்டிகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு அடுத்தடுத்த நிகழ்ச்சியாக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளூரில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இந்த போட்டிகளைக் காண வருகை புரிவர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த போடிக்காக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு என சிறப்பு பயிற்சிகள் நடைபெறும். 

மேலும் படிக்க | Jallikattu 2022: கோலாகலமாக தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இந்நிலையில், மதுரை வைகை ஆற்றில் நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் பசு மற்றும் காளை மாடுகளை அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். அவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் மாடுகளைப் பிடித்து அங்குள்ள சிறுவர்கள் ஜல்லிக்கட்டு விளையாடியுள்ளனர். சிம்மக்கல் படித்துறை பகுதியில் அவிழ்த்து விடப்படும் காளை கன்றுகளை அங்குள்ள சிறுவர்கள் கவர்ந்து அதனுடன் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி உற்சாகமாக விளையாடி வருகின்றனர். வெறுமனே மாடுகளைப் பிடித்து சிறுவர்கள் விளையாடவில்லை.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் வரும் வாடிவாசல் போல உண்மையாகவே ஒரு வாடிவாசலை வைகை ஆற்றில் சிறுவர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். அதில், இருந்து காளைகளை வெளியே வரவைத்து அதன் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர். வாடிவாசல் வழியாக வெளியேறிய காளை ஒன்று, சிறுவனை முட்டி தூக்கி வீசியது. இதில் அந்தச் சிறுவனுக்கு சிறு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டால் சிறுவர்களுக்கு மற்றும் காளைகளுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து காலை, மாலை என இந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் பங்கேற்கும் சிறுவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக கொடுக்கக்கூடாது - தங்கர் பச்சான் தடாலடி !

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News