மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
The Iron Lady என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி இயக்குகிறார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை மாலை வெளியிட்டார்.
பச்சை நிறத்தில், சட்டப்பேரவை பின்னணியில், ஹிலாரி கிளிங்டணின் பாராட்டுச் சொற்றொடர்களோடு இடம்பெற்றுள்ள அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயல லிதாவின் பிரபல வாசகமும் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என The Iron Lady போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Extremely happy and excited to launch the Title poster of #Jayalalithaabiopic #THEIRONLADY I wish @priyadhaarshini and team for a grand success.. pic.twitter.com/4c87Xxks74
— A.R.Murugadoss (@ARMurugadoss) September 20, 2018
இந்நிலையில் படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். `தி அயர்ன் லேடி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனும், சசிகலாவின் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.