கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ. தளவாய் சுந்தரம். முன்னாள் அமைச்சரான இவர் அதிமுக ராஜ்யசபா எம்பி, முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.
இவர் மீது தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரான நடேஷ் (33) என்பவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ALSO READ: திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை
அதில், கடந்த 16ம் தேதின்தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியில் இருந்தபோது, 7 பேர்களுடன் வந்த தளவாய் சுந்தரம் எம்எல்ஏ., முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி தாக்கினர். இதைப்போல் தனது மனைவியும் தாக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ. உட்பட 8 பேர் மீது 5 பிரிவுகளில் ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் சம்பவம் குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR