தொடர் மழை காரணமாக நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு உதகை ரயில் ரத்து!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2019, 04:10 PM IST
தொடர் மழை காரணமாக நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு உதகை ரயில் ரத்து!! title=

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து நாளை முதல் மூன்று நாட்கள் ரத்து செய்ய்ப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 15 ஆம் தேதி தான் உதகை மலை ரயிலின் 111_வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி உதகை ரயில் சேவை தொடங்கப்பட்டது. நீராவி எஞ்சின் மூலம் இந்த மலை ரயில் இயங்குகிறது.

தமிழகத்தின் தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி உட்பட கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் தென்மேற்கு வங்க கடல் - தென்தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டியது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News