இறக்குமதி செய்த மணலை விற்க தடை மறுப்பு : ஐகோர்ட்டு உத்தரவு

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை செலுத்தி இறக்குமதி செய்த மணலுக்கு, விற்பனை செய்ய அனுமதி மறுப்பது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், மணலை விற்க தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Nov 16, 2017, 12:59 PM IST
இறக்குமதி செய்த மணலை விற்க தடை மறுப்பு : ஐகோர்ட்டு உத்தரவு title=

புதுக்கோட்டை மாவட்டம்  அடுத்த ஆவுடையார்கோவிலை சேர்ந்த ராமையா என்ற நபர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு மணல் 

கொண்டுவரப்பட்டுளதாகவும். இதில் 6 லாரி மணலை மட்டும்  மார்த்தாண்டத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு கொண்டு சென்றபோது அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், அவற்றை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மணலை சாலை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு  பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல், ஒரே நாளில் ‘மணலை சுமார் 3,500 லாரிகள் மூலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதும், கண்காணிப்பதும் இயலாத காரியம்’ என்று மறுப்பு தெரிவித்தார்.

 “முறையான அனுமதியுடன் மணல் இறக்குமதி செய்து, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை முறையாக வசூலித்தநிலையில், அனுமதி மறுப்பது ஏன்?” என்று நீதிபதி,  அதற்கு கேள்வி எழுப்பினர்.

 “தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய லைசென்சு பெறவில்லை என்பதால் அனுமதி மறுக்கிறீர்கள்.  இதை ஏற்க இயலாது என்று கூறிய நீதிபதி, அந்த உரிமங்களை பெறுவதற்கான வழிகாட்டல் எதுவும் 

கூறப்படவில்லை என்பதால், தடை செய்யப்படாத பொருளை விற்பனை செய்ய ஒரு மாநிலம் வழியாக மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்வதை மத்திய அரசே அனுமதிபதால், இதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர். மேலும் 

மணலை, விற்பனை செய்ய மனுதாரருக்கு தற்காலிக லைசென்சு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்” என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

Trending News