அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து மூத்த உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக கட்சியின் சார்பில் செங்கோட்டையன் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் சட்டமன்ற கட்சித் தலைவராக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்,
மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.