IPL 2025 Mega Auction News In Tamil: ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
IPL 2025 Mega Auction Latest News: சௌதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டா நகரில் செங்கடல் கடற்கரையோரமாக அமைந்துள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் (Abadi Al Johar Arena) இன்றும் (நவ.24), நாளையும் (நவ. 25) ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறுகிறது.
ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் இன்று தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியிடமும் எஞ்சியுள்ள தொகை விவரம் குறித்தும், எந்த வீரருக்கு இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜாக்பாட் அடிக்க போகுது? என்பதை குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக 120 கோடி ரூபாய் செலவு செய்யலாம். இருப்பினும் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கனவே பயன்படுத்தி விட்டதால் மீதமுள்ள தொகையுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளன.
அந்த வகையில் இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்சமாக 110 கோடியே 50 லட்சம் ரூபாய் உள்ளது. அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 83 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் 73 கோடியும், குஜராத் மற்றும் லக்னவ் அணிகள் தலா 69 கோடியும் கையிருப்பு வைத்து உள்ளன.
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 55 கோடி ரூபாயை மீதம் வைத்து உள்ளது. கொல்கத்தா அணி 51 கோடி ரூபாயும், மும்பை ஹைதராபாத் அணிகள் தலா 45 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல் 41 கோடியும் வைத்து உள்ளன.
இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜோஸ் பட்லர், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் என இந்த 6 வீரர்களை ஏலத்தில் எடுக்க போட்டி போடுவார்கள் எனத் தெரிகிறது. இதில் மூன்று இந்திய விப்பீரர்களின் பெயர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது
இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் மெகா ஏலம், இரவு 10.30 மணிவரை நீடிக்கும்.
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 25 வீரர்களையும் வைத்து அணியை அமைக்கலாம். மொத்தம் 577 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்தே 204 வீரர்களை அணிகள் எடுக்க வேண்டும்.