கொரோனா தடுப்பூசி: 197 நாட்டு கொடிகளோடு நடைபயணம்!

மக்களிடையே கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த 197 நாடுகளின் கொடிகளோடு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராணுவ வீரர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2021, 04:56 PM IST
  • பாலமுருகன் பொதுவாகவே அனைத்து வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் விருப்பத்துடன் பங்கேற்பார்.
  • இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பல்வேறு விதமான பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்
கொரோனா தடுப்பூசி: 197 நாட்டு கொடிகளோடு நடைபயணம்! title=

மதுரை: கொரோனாவின் கோர தாண்டவத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகளை பலரும் எடுத்து வருகின்றனர்.அதில் ஒன்றுதான் தடுப்பூசி போடுவது.அத்தகைய தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி 197 நாடுகளின் கொடிகளோடு ராணுவ வீரர் ஒருவர் 2,800 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்கிறார்.

மதுரை அருகேயுள்ள சோமநாதபுரம் கிராமத்தினைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் இந்திய ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர் பொதுவாகவே அனைத்து வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் விருப்பத்துடன் பங்கேற்பார்.  இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூர நடை பயணம் செய்வது,ஓடுவது போன்றவைகளையும் செய்வார்.இதன் காரணமாகவே இவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.  விருதுகள் மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளின் உலகசாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்து வானளாவிய சாதனைகளை அசால்டாக வென்ற பெருமையினையும் பெற்றவர்.

corona

இந்நிலையில்,இவர் கொரோனாவை ஒழிக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தடுப்பூசி போட்டுக் கொள்வதின் முக்கியதுவத்தினை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் ராமேஸ்வரம் தொடங்கி அயோத்தி வரை 2,800 கிலோமீட்டர் தூரம், 197 நாடுகளின் தேசிய கொடிகளோடு புயலென புறப்பட்டு நடைபயணமாக சென்று கொண்டிருக்கிறார்.  இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பல்வேறு விதமான பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். செல்லும் வழியெங்கும் பலரும் சால்வை அணிவித்தும்,மாலைகள் அணிவித்தும்,பட்டாசுகளை வெடித்தும் இவரை வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ அதிர்ச்சியூட்டும் நாய்களின் படங்கள்! ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் என்ன நடக்கிறது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News