அதிர்ச்சியூட்டும் நாய்களின் படங்கள்! ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் என்ன நடக்கிறது?

3 நாய்களில், 2 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன. அந்த நாயிகளின் மீட்பு குறித்து குறைந்தது 24 மணிநேரத்திரு பிறகு தான் கூறமுடியும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 22, 2021, 04:01 PM IST
  • 3 நாய்களில், 2 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன.
  • இந்த 3 நாய்கள் PFA என்ற என்ஜிஓவால் தத்தெடுக்கப்பட்டது
  • ஐஐடி நிர்வாகம் உணவு-தண்ணீர் வழங்காததால் நாய்கள் இறப்பு.
அதிர்ச்சியூட்டும் நாய்களின் படங்கள்! ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் என்ன நடக்கிறது?

சென்னை: மிகவும் மோசமான நிலையில் 3 நாய்கள் ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. நாய்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகி உள்ளன. அதைப்பார்க்கும் போது நாய்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை மற்றும் நல்ல பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. நாய்களை பரிசோதித்த மருத்துவர்களின் ஆரம்ப அறிக்கையில், நாய்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவை இரத்த சோகை மற்றும் முக்கிய உறுப்புகள் அபாயகரமான நிலையில் உள்ளன எனக் கூறப்பட்டு உள்ளது.

ஆபத்தான நிலையில் நாய்களின் உடல்நிலை:
உணவை வழங்கிய போது அதை சாப்பிட இரண்டு நாய்கள் மறுத்துவிட்டன. மிகவும் வற்புறுத்தலுக்குப் பிறகு இறுதியாக இரண்டு நாய்களும் அந்த ஒரு பகுதியை மட்டுமே சாப்பிட்டன. 3 நாய்களில், 2 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன. அந்த நாயிகளின் மீட்பு குறித்து குறைந்தது 24 மணிநேரத்திரு பிறகு தான் கூறமுடியும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த 3 நாய்கள் PFA என்ற என்ஜிஓவால் தத்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த வாரம், ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் அமைந்துள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் பல தெருநாய்கள் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியானதையடுத்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Tamil Nadu Health Minister Ma Subramanian) ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வளாகத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , "ஐஐடி வளாகத்தில் கடந்த ஆண்டில் மாட்டும் 56 தெருநாய்கள் இறந்துள்ளன. அக்டோபர் 2020 தரவுகளின்படி காப்பகத்தில் 188 நாய்கள் இருந்தன. அந்த நாய்களை கண்காணிக்க ஐஐடி நிர்வாகம் (IIT management) ஒரு குழுவை அமைத்தது. நாய்களைப் பராமரிக்க முழுநேர பணியாளர்களாக ஒன்பது பேர் நியமிக்கப்பட்டனர். 

மேலும் பேசிய அவர், 29 நாய்கள் தத்தெடுக்கப்பட்டதாகவும், 14 நாய்கள் ஆக்ரோஷமாக இல்லாததால் வெளியே விடப்பட்டதாகவும், இரண்டு நாய்கள் தப்பிவிட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மீதமுள்ள 87 நாய்களை இன்ஸ்டிட்யூட் நிர்வாகம் பராமரித்து வருகிறது என்றார்.

ஒன்பது வயதைக் கடந்த சில நாய்கள் நோய் மற்றும் முதுமைப் பிரச்னைகள் காரணமாக இறந்துவிட்டதாக நிர்வாகம் கூறியதாகவும் அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டு முதல் நாய் தாக்குதலால் ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் 55 மான்கள் இறந்துவிட்டதாக ஐஐடி-எம் அதிகாரிகள் கூறியதை அடுத்து, மான்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க நாய்களை அதன் காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார்.

2019 ஆம் ஆண்டில் 38 மான்களும், 2020 ஆம் ஆண்டில் 28 மான்களும் இந்த வளாகத்தில் இறந்ததாகவும், இந்த ஆண்டு மூன்று மான்கள் மட்டுமே இறந்ததாகவும் நிர்வாகம் தன்னிடம் கூறியதாக அமைச்சர் கூறினார். 

"நாய்கள் மற்றும் மான்கள் இரண்டின் உயிர்களும் முக்கியமானவை, இரண்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஐஐடி-எம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது" என்று அவர் கூறினார். அமைச்சர் மேலும் கூறுகையில், ஐஐடி-எம் அதிகாரிகள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதாகவும், இந்தப் பிரச்சினை தொடர்பான எதிர்கால வளர்ச்சி குறித்து சென்னை மாநகராட்சிக்கு (Chennai Corporation ) தகவல் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

உண்மைத்தன்மை வேண்டும்: விலங்கு ஆர்வலர் கோரிக்கை
அக்டோபர் 15 ஆம் தேதி, பெங்களூரைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர் கேபி ஹரிஷ் (KB Harish), ஐஐடியின் பதிவாளர் டாக்டர் ஜேன் பிரசாத் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக நகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை பதிவு செய்தார். 2020 அக்டோபர் முதல் 186 ஆரோக்கியமான தெருநாய்களை 'சட்டவிரோதமாகப் பிடித்து (illegally capturing) கூண்டுகளில் அடைத்து வைத்துள்ளதாக' பதிவாளர் மற்றும் நிர்வாகத்தின் மீது தனது புகாரில் ஹரிஷ் குற்றம் சாட்டியுள்ளார். 

உணவு-நீர் சரியாக வழங்கப்படவில்லை:
ஐஐடி நிர்வாகம் சரிவிகித உணவு மற்றும் தண்ணீரை வழங்காததால் 45 நாய்கள் இறந்ததாகவும், தொடர்ந்து கூண்டுகளில் அடைக்கப்பட்டதால் பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாய்கள் பாதிப்புக்குள்ளாகின என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐஐடி-எம் அதிகாரிகள் மீது ஐபிசியின் பிரிவு 428 மற்றும் 429 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் (Animals Act) கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு அவர் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு தெருநாய் 14-15 ஆண்டுகள் வரை வாழும்:
2020 ஆம் ஆண்டு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்த பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா (People for Cattle in India) நிறுவனர் அருண் பிரசன்னா, ஐஐடி நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி நாய்களின் இறப்பை மறைக்க முயல்கிறது என்று குற்றம்சாடினார். ஒரு தெருநாய் 14-15 ஆண்டுகள் வரை வாழ்கிறது. ஆனால் இவர்கள் கூறுவது போல எட்டு அல்லது ஒன்பது வயதில் நாய்கள் இறக்கின்றன என்ற இந்தக் கூற்று உண்மையல்ல.

இரண்டாவதாக, 2020 இல் பசுமை தீர்ப்பாயம் (Green Tribunal) 'மான் இறப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐஐடி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. எனவே, ஐஐடி நிர்வாகம் ஒரு குழுவை அமைத்தது. இறுதியாக மான்கள் இறப்பிற்கு நாய்கள் தான் காரணம் என்று ஒரு முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில் இந்த குழுவில் விலங்கு நலனுடன் தொடர்புடைய எவரும் சேர்க்கப்படவில்லை. மானின் சடலத்திற்கு அருகில் நாய்களின் சில இருந்தது போன்ற படங்களைத் தவிர, மான் மரணத்திற்கு நாய்கள் தான் காரணம் என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை, இறந்த விலங்குகளை நாய்கள் உண்கின்றன, ஆனால் அவை மற்ற காட்டு விலங்குகளைப் போல வேட்டையாடுவதில்லை. நாய்களால் மான் கொல்லப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று அவர் கூறினார்.

ஐஐடி மீது சந்தேகம்:
நிர்வாகத்தால் கூறப்படும் நாய் இறப்புகளின் எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையை விட குறைவாக இருப்பதாக அருண் பிரசன்னா கூறினார். அமைச்சரின் வருகைக்கு முன்னதாக நாய்களுக்கான பிரேதப் பரிசோதனையை நிர்வாகம் நடத்தவில்லை என்று அவர் கூறினார்.

நிர்வாகம் தத்தெடுப்பதற்காக கொடுத்ததாகக் கூறிய நாய்களின் எண்ணிக்கை குறித்து விலங்கு ஆர்வலர் சந்தேகத்தை எழுப்பி உன்னனர்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News