தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என வேதாந்தா நிறுவன தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. தமிழக அரசின் தடையினை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில், ஆலையை ஆய்வு செய்ய, ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையின் முடிவில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவிக்கையில்...
P. Ramnath, CEO Sterlite Copper: After discussions with stakeholders, we have looked at 4 major projects that we have announced. We'll set up a school & a hospital. We also plan to increase the greenery in the entire town of Tuticorin & water supply to the nearby villages. pic.twitter.com/XMJChgmU1N
— ANI (@ANI) December 20, 2018
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்னு, அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த புதிய விதிமுறைகளை நிறைவேற்ற எங்களுக்கும் நேரம் இருக்கிறது. புதிய நிபந்தனைகளை நிச்சையம் கடைபிடிப்போம்.
தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேதாந்தா நிறுவனம், அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதற்கான அனுமதி கோரியுள்ளோம்.
சுமார் 100 கோடி மதிப்பில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம்.
15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மேலும், ஒரு பள்ளி, ஒரு மருத்துவமனை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.