திருச்சியில் BJP பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை..!

திருச்சியில் பாஜக பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Updated: Jan 27, 2020, 03:55 PM IST
திருச்சியில் BJP பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை..!

திருச்சியில் பாஜக பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

திருச்சி வரகனேரி பென்ஷனர் காலனியை சேர்ந்தவர் விஜயரகு, பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தார். இவரது வீட்டருகே வசித்து வரும் மிட்டாய் பாபு என்பவர், முறைகேடாக லாட்டரி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாஜக பிரமுகர் விஜயரகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை காந்தி மார்க்கெட் அருகில் விஜய ரகுவை, 5 பேர் கொண்ட கும்பலுடன் மிட்டாய் பாபு அரிவாளால் வெட்டியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயரகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மிட்டாய் பாபு உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

இந்த கொடூரமான சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நடந்தது. கொலை வழக்கு தொடர்பாக காந்திநகர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.