ஜெயலலிதா நினைவிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே கட்டப்படுகிறது'' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கம்!!
சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அனுமதி அளித்த மாநில கடலோர ஒழுங்கு முறை ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் துரைசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, 5 ஆயிரத்தி 571 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாகவும், இந்நினைவிடத்தால் சுற்றுசூழல் பாதிப்போ, நீர்நிலைகள் பாதிப்போ இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள விளக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஜுலை 9 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.