ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லதல்ல -கே.எஸ்.அழகிரி

Rajiv Gandhi Convicts: கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2022, 04:23 PM IST
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரு நிறுவிய கொள்கை தான் காரணம்.
  • சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்?
  • காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும்.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லதல்ல -கே.எஸ்.அழகிரி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மரியாதை செலுத்தினார். அப்பொழுது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. கூட்டணி வேறு கொள்கை வேறு. மேலும் ஜவஹர்லால் நேரு நாட்டை உருவாக்கினார். பிரதமர் மோடி நாட்டை விற்கிறார்" எனக் கூறியுள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்த போது கே.எஸ்.அழகிரி பேசியது,

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பெருமைப்பட வேண்டிய நாள். இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சக்தி அவர். விவசாயம், பொருளாதார வளர்ச்சிக்கு நேரு நிறுவிய கொள்கை தான் காரணம். நேரு இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு இந்தியா வந்திருக்கும்.

நேரு உருவாக்கினார்.. மோடி விற்கிறார்

நேரு அன்று பொதுத்துறை என்ற அற்புதத்தை உருவாக்கினார். இன்று தனியார்மயம் செய்கிறார்கள். ஒருவர் உருவாக்கினார். ஒருவர் விற்கிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவை கட்டமைக்கும். மீண்டும் இந்தியாவை மேம்படுத்துவோம். இந்தியாவை இந்திய மக்களின் நாடாக மாற்றுவோம்.

மேலும் படிக்க: ராஜீவ் காந்தி வழக்கு : விடுதலையானவர்கள் உண்ணாவிரதமா... இன்னும் சிறைப்பறவைகளாக நால்வர்?

Rajiv Gandhi Murder Case

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ் அழகிரி;-

கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?

இஸ்லாமியகளுக்கு ஒரு நீதி? ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு கொள்கை வேறு. காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்.

மேலும் படிக்க: தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கு நன்றி: செய்தியாளர் சந்திப்பில் நளினி

கூட்டணி வேறு கொள்கை வேறு
திமுக கூட்டணியில் இருந்தாலும் அழுத்தம் கொடுக்க முடியாது. சிறையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்ய கோரி திமுக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திவீர்களா? என்ற கேள்விக்கு கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு என கே.எஸ் அழகிரி பதில் அளித்தார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மரியாதை செலுத்தும் போது, அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், டில்லி பாபு, மாநில பொது செயலாளர்கள் வாசு, தளபதி பாஸ்கர், கடல் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க: சிறை வாசம் முடிந்தது... 30 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News