Lok Sabha Elections 2024: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 15 மாதங்களுக்கு முன்பாக அங்கு வசிக்கும் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த்திக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாது, இந்தியாவையே அதிர்ச்சலைகளை ஏற்படுத்தியது.
நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு
அதன் பின் இது சம்பந்தமாக வெள்ளனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் மாற்ற வேண்டும் என தெரிவித்து போராட்டமும் செய்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் இந்த வழக்கை மாற்றியது.
எஸ்சி எஸ்டி வன்கொடுமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
இது குறித்து கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 250 பேரிடம் விசாரணை செய்து மேலும் 25 பேருக்கு மேல் டிஎன்ஐ சோதனையும் செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு குரல் மாதிரி சோதனையும் செய்யப்பட்டது இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி வன்கொடுமை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தேர்தலை புறக்கணிக்கிறோம் என பதாகைகளை வைத்துள்ள பொதுமக்கள்
இந்நிலையில் இம்மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கின்றோம் எனக் கூறியுள்ளனர். 15 மாதம் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. எங்களுக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் எனக் கூறி புறக்கணிப்பு பதாகைகளை வைத்துள்ளனர். இதனால் தற்பொழுது ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பி - ஜெயக்குமார் விளாசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ