காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வருகின்றார்!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Chennai: Tamil Nadu Governor Banwarilal Purohit met MK Stalin at Kauvery Hospital today, where DMK President M Karunanidhi was admitted late last night. pic.twitter.com/iu8bmJGiBy
— ANI (@ANI) July 28, 2018
Chennai: DMK supporters continue to gather outside Kauvery Hospital, where DMK President M Karunanidhi is admitted. pic.twitter.com/vTd2ygzhwX
— ANI (@ANI) July 28, 2018
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
Kalaignar M Karunanidhi is a born fighter. I am sure he will fight back and return fast to good health. Wish him a speedy recovery
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) July 28, 2018
இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய நாளை, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!